Thursday 29 October 2015

தேற்றிக்கொள்ள முடியவில்லை!!
இரண்டு பெண் குழந்தைகளுக்குப்பின் மூன்றாவதாக பிறந்த 14 வயது அருமை மகனை டெங்கு காய்ச்சல்நோய்க்குபறிகொடுத்திருக்கும் என் நண்பன் விவேக்கை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை. பிரபுதேவாவும் நானும் இரங்கல்தெரிவிக்க சென்றிருந்தோம்.விவேக்கையும் அவரது மகன் உடலையும் கண்டவுடன் நிலைகுலைந்து போனோம். இதே வயதில் நான்கு ஆண்டுகளுக்கு முன் புற்றுநோய்க்கு தன் மூத்த மகனைப் பறி கொடுத்திருந்த பிரபுதேவாவும் விவேக்கும் கட்டிப்பிடித்து கதறியக்காட்சியை மறக்க முடியவில்லை. வீட்டுக்குத்திரும்பும் போது நண்பன் பிரபுதேவா அழுதுபுலம்பியதில் நானும் கதறி விட்டேன்.
ஒருதுளி கண்ணீர்கூட வழியாமல் நிதானத்தை இழந்து நிலைமறந்திருக்கும் விவேக்கின் மனைவிக்கும்,விவேக்குக்கும் யாராலும் ஆறுதல் சொல்லமுடியவில்லை. இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நம்மையெல்லாம் சிரிக்கவும்சிந்திக்கவும் வைத்தக் கலைஞனை எப்படித்தேற்றுவது தெரியவில்லை!

Monday 19 October 2015

ஒரு செய்தி இருக்கு!
நான் நினைத்தது போலவே நடிகர் சங்கத்தேர்தல் முடிவு அமைந்திருக்கிறது.இந்தத்தேர்தல் மூலம் மக்களாகிய நமக்கு ஒரு செய்தி இருப்பதாக உணர்கிறேன்.இச்சங்கத்தில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அடக்குமுறையும்,அநீதியும்,அட்டூழியமும் செய்துவந்தவர்களை பொறுத்துக்கொள்ளமுடியாத இளையதலைமுறை தேர்தல்மூலம் விரட்டியடித்து புதிய நம்பிக்கையையும் மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தை
ஐம்பது ஆண்டுகளாக இரண்டு கட்சிகளை உள்ளடக்கிய சில குடும்பங்கள் மட்டுமே தொடர்ந்து மாறி மாறி ஆட்சிசெய்வதைப்பற்றிய சகிப்புத்தன்மையிலிருந்து மக்கள் சிந்திப்பதற்கு இந்த தேர்தல் முடிவு வழிவகுத்துக்கொடுத்திருப்பதாக எனக்குத்தோன்றுகிறது.நடிகர் சங்க உறுப்பினர்கள் விழித்துக்கொண்டது போல் மக்களும் இந்தத்தேர்தலில் ஒருபுதியமாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என நம்புகின்றேன்! இளையதலைமுறை இந்தமுறை இத்தகையமாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக இந்தசட்டமன்றத்தேர்தல் விளங்கியேத்தீரும்!

Saturday 10 October 2015

நடிகர் சங்கத் தேர்தலும்,ஊடகங்களும்- எனும் தலைப்பில் நான் பங்கேற்ற 'புதிய தலைமுறை"- தொலைக்காட்சியின் மக்கள் மேடை நிகழ்ச்சியின் பதிவு இணைப்பு.

இதனை அனைவரும் காண வேண்டிய பதிவாக கருதுகின்றேன்.

Nadigar Sangam Elections and the Media - Makkal Medai (09/10/2015) | Puthiyathalaimurai TV

https://www.youtube.com/watch?v=UObjqxvbPx0